ADDED : ஆக 04, 2011 11:46 PM
திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகே என்.வைரவன்பட்டி வயிரவர் கோயில்
விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.வயிரவன்பட்டியிலிருந்து தென்கரை
வரை போட்டி நடத்தப்பட்டது.பெரிய மாடு பிரிவில் மேலூர்
கொட்டகுடி,மாவூர்,பொய்கைவயல், காரைக்குடி வண்டிகளும், நடுமாடு பிரிவில்
மாவூர்,பொன்குண்டுப்பட்டி, நத்தமாங்குடி, கே.புதுப்பட்டி வண்டிகளும்,
சின்னமாடு பிரிவில் திருவரும்பூர், முருகாண்டிப்பட்டி,ஓனாங்குடி,சாக்கோட்டை
வண்டிகளும் வென்றன.
தலைவர் சிதம்பரம்,செயலர் லெட்சுமணன், இணைச் செயலர் பழனியப்பன்,பொருளாளர் ராமசாமி விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.