/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பல்கலை கோ-கோ போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்பல்கலை கோ-கோ போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்
பல்கலை கோ-கோ போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்
பல்கலை கோ-கோ போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்
பல்கலை கோ-கோ போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லூரி சாம்பியன்
ADDED : ஆக 03, 2011 01:17 AM
கோவை : பாரதியார் பல்கலை அனைத்துக்கல்லூரி மாணவருக்கான கோ-கோ போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை சார்பில் 2011-'12 ஆண்டுக்கான அனைத்து கல்லூரி விளையாட்டு போட்டிகளை பல்வேறு கல்லூரிகள் பொறுப்பேற்று நடத்தி வருகின்றன. இதன் ஒரு பிரிவாக மாணவருக்கான கோ-கோ போட்டி கொங்கு கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடந்தது. பாரதியார் பல்கலையை சேர்ந்த 28 கல்லூரி அணிகள் 'நாக்அவுட்-லீக்' முறையிலான போட்டியில் பங்கேற்றன. இறுதி சுற்று போட்டியில் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி 19-10 புள்ளிகள் வித்தியாசத்தில் நாராயணகுரு கலை அறிவியல் கல்லூரியை வென்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் கொங்கு கலை அறிவியல் கல்லூரி 12-4 புள்ளி கணக்கில் கே.ஜி., கலை அறிவியல் கல்லூரியை வென்றது.தமிழ்நாடு மின்வாரிய (ஈரோடு மண்டலம்) இன்ஜினியர் செல்வமணி பரிசு வழங்கினார். கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். அறக் கட்டளை உறுப்பினர் குமாரசாமி, பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனர் முருகவேல் முன்னிலை வகித்தனர். கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராமன் வரவேற்றார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தனுஜா நன்றி கூறினார்.