/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/விவசாயிகளுக்கு திருந்திய நெற்பயிர் சாகுபடி பயிற்சிவிவசாயிகளுக்கு திருந்திய நெற்பயிர் சாகுபடி பயிற்சி
விவசாயிகளுக்கு திருந்திய நெற்பயிர் சாகுபடி பயிற்சி
விவசாயிகளுக்கு திருந்திய நெற்பயிர் சாகுபடி பயிற்சி
விவசாயிகளுக்கு திருந்திய நெற்பயிர் சாகுபடி பயிற்சி
ADDED : ஆக 01, 2011 01:46 AM
திருவள்ளூர் : திரூர் வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகளுக்கு திருந்திய நெல் பயிர் சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், திரூர் கிராமத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், வேளாண் அறிவியல் நிலையம் செயல்படுகிறது.
இங்கு, உலக வங்கியின் நிதி உதவியுடன் நீர்வள, நிலவளத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியான, ஆரணியார் உபவடிவ பாசன திட்டத்தில், விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டது.வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் தேவநாதன் மற்றும் தோட்டக்கலைத் துறை உதவிப் பேராசிரியர் முத்துராமலிங்கம் ஆகியோர் இதில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.திருந்திய நெல் சாகுபடி மற்றும் துல்லிய பண்ணையில் வாழை மற்றும் காய்கறிகள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு நிலைய பயிற்சி அளிக்கப்பட்டது.கும்மிடிப்பூண்டி அடுத்த ஆர்.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.