/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கொடைக்கானல் நகராட்சி தலைவருக்கு ஜாமின்கொடைக்கானல் நகராட்சி தலைவருக்கு ஜாமின்
கொடைக்கானல் நகராட்சி தலைவருக்கு ஜாமின்
கொடைக்கானல் நகராட்சி தலைவருக்கு ஜாமின்
கொடைக்கானல் நகராட்சி தலைவருக்கு ஜாமின்
ADDED : ஜூலை 29, 2011 11:06 PM
திண்டுக்கல் : நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கொடைக்கானல் நகராட்சி தலைவர் முகமது இப்ராகிமுக்கு (தி.மு.க.,) நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.கொடைக்கானலை சேர்ந்த ஜான் ரோஷன் பராமரிப்பில் இருந்த நான்கு ஏக்கர் பண்ணை வீட்டை அபகரிக்க முயன்றதாக, முகமது இப்ராகிம், புரோக்கர்கள் தலிப்சிங், சேகர் செபாஸ்டியான், கடந்த 13 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
மதுரை மத்திய சிறையில் இருந்த முகமது இப்ராகிம், ஜாமின் கேட்டு, திண்டுக்கல் கோர்ட்டில் மனு செய்தார். திருச்சி கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனில், தினமும் காலை 10, மாலை 5 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என, நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.