/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருவானைக்காவல் கோவில் ஆடிப்பூர உற்சவம் துவக்கம்திருவானைக்காவல் கோவில் ஆடிப்பூர உற்சவம் துவக்கம்
திருவானைக்காவல் கோவில் ஆடிப்பூர உற்சவம் துவக்கம்
திருவானைக்காவல் கோவில் ஆடிப்பூர உற்சவம் துவக்கம்
திருவானைக்காவல் கோவில் ஆடிப்பூர உற்சவம் துவக்கம்
ADDED : ஜூலை 25, 2011 01:54 AM
திருச்சி: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக கருதப்படும் சிறப்புமிக்கது, திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோவில்.
ஆண்டுதோறும் இங்கு ஆடிப்பூர தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்தாண்டு ஆடிப்பூர தெப்ப உற்சவம், நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஆறாம் நாள் வரை அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர் கேடயத்தில் புறப்பட்டு, நான்காம் பிரகாரத்தில் திருவீதி உலா வரும் வைபவம் நடக்கிறது.
ஏழாம் நாளன்று, ரிஷப வாகனத்திலும், எட்டாம் நாளன்று சிம்ம வாகனத்திலும், ஒன்பதாம் நாள் வெள்ளி மஞ்சத்திலும் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நாளான 10ம் நாள் (ஆக., 2ம் தேதி) இரவு எட்டு மணிக்கு, அம்மனுக்கு ஏற்றி இறக்கும் பூஜை நடக்கிறது. ஆகஸ்ட் 4ம் தேதி மாலை 6.30 மணிக்கு, கோவிலின் உள் தெப்பக்குளத்தில் தெப்ப மிதவையில் அகிலாண்டேஸ்வரி, ஜெம்புகேஸ்வரர் ஸ்வாமிகள் எழுந்தருளி, ஐந்து முறை வலம் வந்து அருள்பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.