/உள்ளூர் செய்திகள்/சேலம்/லாரி உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் "அபேஸ்'லாரி உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் "அபேஸ்'
லாரி உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் "அபேஸ்'
லாரி உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் "அபேஸ்'
லாரி உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் "அபேஸ்'
ADDED : அக் 04, 2011 01:06 AM
சேலம்: சேலம், பள்ளப்பட்டியில் லாரி உரிமையாளரிடம், ஐந்து லட்சம் ரூபாயை
மர்ம நபர்கள், திருடி சென்று விட்டனர்.
ராசிபுரத்தை சேர்ந்தவர்
இதயச்சந்திரன்(39). கடந்த சில மாதங்களுக்கு முன், கேரளாவில் இருந்து லாரி
ஒன்று வாங்கியுள்ளனர். லாரிக்கான, வங்கித் தவணை தொகையை கட்டுவதற்காக,
பையில் ஐந்து லட்சம் ரூபாய் பணத்துடன், ஆண்டகளூர் கேட்-புது பஸ் ஸ்டாண்ட்
செல்லும் அரசு பஸ்ஸில் ஏறியுள்ளார். இவர் அமர்ந்திருந்த சீட்டுக்கு அருகில்
யாரும் இல்லை. பஸ், திருமகள் பைபாஸ் அருகே வந்து கொண்டிருந்த போது, ஏழு
பேர் கொண்ட கும்பல் ஒன்று ஏறியுள்ளது. அதில் இரண்டு பேர், இதயச்சந்திரன்
அருகே அமர்ந்துள்ளனர். பஸ் மெய்யனூர் தாண்டி, பள்ளப்பட்டி அருகே வந்த போது,
அந்த கும்பல், இதயச்சந்திரனிடம் இருந்த பையை திருடிகொண்டு, கீழே இறங்கி
சென்றுவிட்டது. பஸ்ஸில் இருந்து இறங்கிய போது, பை காணாமல் போனதை கண்டு
அதிர்ச்சி அடைந்த இதயசந்திரன் பள்ளப்பட்டி போலீஸில் புகார் செய்துள்ளார்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


