/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சூதாடிய எட்டு பேர் கைதுரூ.1.51 லட்சம் பறிமுதல்சூதாடிய எட்டு பேர் கைதுரூ.1.51 லட்சம் பறிமுதல்
சூதாடிய எட்டு பேர் கைதுரூ.1.51 லட்சம் பறிமுதல்
சூதாடிய எட்டு பேர் கைதுரூ.1.51 லட்சம் பறிமுதல்
சூதாடிய எட்டு பேர் கைதுரூ.1.51 லட்சம் பறிமுதல்
ADDED : செப் 30, 2011 01:42 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய எட்டு பேரை,
போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஒரு லட்த்து 51 ஆயிரம் ரூபாய்
ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம்
தனியார் கல்லூரி பின்புறம் உள்ள விவசாயத் தோட்டத்தில், கும்பல் ஒன்று பணம்
வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், இன்ஸ்பெக்டர்
சண்முகம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில்
ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த
ராஜ் (27), அப்பு (26), செந்தில் (28), திருச்சி ரகுநாதன், சேமல்
சம்பத்குமார் (30), சங்ககிரி ஜெகநாதன் (29), சின்னதம்பி (30) பள்ளிபாளையம்
சரவணன் (29) ஆகிய எட்டு பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, ஒரு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல்
செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..