/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நிலத்தை அபகரிக்க போலி ஆவணம்: 5 பேர் மீது வழக்குநிலத்தை அபகரிக்க போலி ஆவணம்: 5 பேர் மீது வழக்கு
நிலத்தை அபகரிக்க போலி ஆவணம்: 5 பேர் மீது வழக்கு
நிலத்தை அபகரிக்க போலி ஆவணம்: 5 பேர் மீது வழக்கு
நிலத்தை அபகரிக்க போலி ஆவணம்: 5 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 21, 2011 11:36 PM
கள்ளிமந்தையம் : ஒட்டன்சத்திரம் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்ற ஐந்து பேர் மீது மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கொத்தயம் அருகே கூத்தம்பூண்டியான்வலசை சேர்ந்த ராமசாமி மனைவி மீனாட்சி (43).
இவர், கிரையம் செய்த ஏழு ஏக்கர் நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி, மகேந்திரன், ஆறுச்சாமி, ராமசாமி மற்றும் கணேசன் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து பூர்வீக பாத்தியம் என்று கூறி பட்டா வாங்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து மீனாட்சியிடம் கேட்ட போது, குடும்பத்தையே தீயிட்டு கொளுத்தி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் மீனாட்சி மனுதாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுப்படி கள்ளிமந்தையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


