Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டிபாஸிட் கூட பெறாமல் குடிநீர் இணைப்புபணியை நிறுத்த ஆணையர் உத்தரவு

டிபாஸிட் கூட பெறாமல் குடிநீர் இணைப்புபணியை நிறுத்த ஆணையர் உத்தரவு

டிபாஸிட் கூட பெறாமல் குடிநீர் இணைப்புபணியை நிறுத்த ஆணையர் உத்தரவு

டிபாஸிட் கூட பெறாமல் குடிநீர் இணைப்புபணியை நிறுத்த ஆணையர் உத்தரவு

ADDED : செப் 29, 2011 01:14 AM


Google News
காங்கேயம்:தேர்தல் விதிமுறையை மீறி ஓட்டுக்காக காங்கேயத்திலும், சிவன்மலை பஞ்சாயத்திலும் டெபாஸிட் கூட வாங்காமல் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், இரண்டு கட்டமாக அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 22ம் தேதி முதல் மனுத்தாக்கல் துவங்கி, 29ம் தேதி வரை நடக்கிறது. 30ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது. 3ம் தேதி மனு வாபஸ் பெறப்படுகிறது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் துவங்கிய நிலையில் அரசு துறைகளின் சார்பில் எவ்வித நலத்திட்ட உதவிகள், புது திட்டப்பணிகள் போன்றவற்றை தேர்தல் விதிமுறைப்படி செயல்படுத்தக்கூடாது. ஆனால் காங்கேயம் நகராட்சி 16வது வார்டில், சுபாஷ்வீதி, வனிதா கல்விநிலையம் அருகே அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வழங்கும் குடிநீர் இணைப்புகள் வார்டு கவுன்சிலர் முயற்சியில், புதிதாக வழங்கப்பட்டன.அதேபோல், சிவன்மலை கிராம பஞ்சாயத்து தலைவர் மயிலாத்தாள்முத்துசாமி தனது பஞ்சாயத்துக்குட்பட்ட நீலகாட்டுபுதூர், ராசாபாளையம், ராமபட்டினம் ஆகிய கிராமங்களில் டெபாசிட் கூட பெறாமல், நீலகாட்டுபுதூர் பஞ்சாயத்தில் 20 வீட்டு குடிநீர் இணைப்பு, ராசாபாளையத்தில் ஏழு குடிநீர் இணைப்பு ராமபட்டினத்தில் 20 குடிநீர் இணைப்பு என மொத்தம் 47 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து பஞ்சாயத்து தலைவருக்கு, ஏற்கனவே பி.டி.ஓ., தரப்பிலிருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதை மீறி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

காங்கேயம் பி.டி.ஓ., பாஸ்கர் கூறியதாவது: தேர்தல் விதிமுறை அமலில் உள்ளபோது, எவ்வித பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என 15 பஞ்சாயத்து தலைவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். நேற்றுமுன்தினம் இரவு சிவன்மலை பஞ்சாயத்து தலைவரிடமும் பணியை நிறுத்த கூறியுள்ளோம். மீறி பணியை மேற்கொண்டால், கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us