Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பட்டாசு விபத்து பலிகளை தடுக்க "நவீன தீக்காய சிகிச்சை பிரிவு'அரசுக்கு பரிந்துரை

பட்டாசு விபத்து பலிகளை தடுக்க "நவீன தீக்காய சிகிச்சை பிரிவு'அரசுக்கு பரிந்துரை

பட்டாசு விபத்து பலிகளை தடுக்க "நவீன தீக்காய சிகிச்சை பிரிவு'அரசுக்கு பரிந்துரை

பட்டாசு விபத்து பலிகளை தடுக்க "நவீன தீக்காய சிகிச்சை பிரிவு'அரசுக்கு பரிந்துரை

ADDED : ஆக 19, 2011 10:44 PM


Google News
விருதுநகர்: சிவகாசி அரசு மருத்துவமனையில் 4 கோடி ரூபாய் செலவில் 'நவீன தீக்காய சிகிச்சை பிரிவு' தொடங்க, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 287 பட்டாசு தொழிற்சாலைகள், 396 தீப்பட்டி தொழிற்சாலைகளில் ஒரு லட்சம் பேர் வரை பணிபுரிகிறார்கள். 2009 ல் நடந்த விபத்தில் 98 பேர் தீக்காயம், 32 பேர் இறந்துள்ளனர். 2010 ல் 78 பேர் தீக்காயம், 34 பேர் இறந்துள்ளனர். 2011ல் 78 பேர் தீக்காயம், 32 பேர் இறந்துள்ளனர்.

சராசரியாக மாதம் ஒன்றுக்கு 7 முதல் 10 பேர் வரை தீக்காயமும், 3 முதல் 5 பேர் வரை இறக்கவும் நேரிடுகிறது. இதை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக 'நவீன தீக்காய சிகிச்சை பிரிவை' சிவகாசி அரசு மருத்துவமனையில் 4 கோடி ரூபாய் செலவில் உருவாக்க, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இப்பிரிவில் அனைத்து வகை சிகிச்சையையும் கண்களால் பார்க்க கூடிய கண்ணாடி கொண்ட சுமார் 20 படுக்கை அறைகள், செயற்கை தோல் போர்த்தும் பிரிவு, சிகிச்சைக்கு பின் கவனிப்பு வார்டு, நவீன ரத்த கூறு வங்கி, நவீன ஆய்வக பரிசோதனை கூடம் ஆகியவை ரூ. 2 கோடியே 10 லட்சம் செலவில் அமைக்க, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் பிளாஸ்டிக் சர்ஜன் 2 பேர், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் 4 பேர், மயக்க மருந்து நிபுணர்கள் 2 பேர், பொது மருத்துவர் 4 பேர், எலும்பு சிகிச்சை மருத்துவர் ஒருவர், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் தலா 20 பேரை நியமிக்கவும், நவீன கருவிகளான இருதய மானிட்டர், அனைத்து துறைகளிலும் ஆக்ஸிஜன் வசதி, குளிர்சாதன வசதி வென்டிலேட்டர் மற்றும் தேவையான உபகரணங்கள் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் வாங்குவதற்கும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தீ விபத்தால் ஏற்படும் மனித உயிரிழப்பை 75 முதல் 80 சதவீதம் வரை கட்டுபடுத்த முடியும். இந்த நவீன சிகிச்சை வசதி தமிழ்நாட்டின் முன்மாதிரியான தீக்காய சிகிச்சை பிரிவாக உருவாக்கப்படவுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us