Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஊராட்சி நிதி முழுமையாக செலவிடுவேன்: நாயகம்

ஊராட்சி நிதி முழுமையாக செலவிடுவேன்: நாயகம்

ஊராட்சி நிதி முழுமையாக செலவிடுவேன்: நாயகம்

ஊராட்சி நிதி முழுமையாக செலவிடுவேன்: நாயகம்

ADDED : அக் 13, 2011 12:40 AM


Google News

திருவாடானை : திருவாடானை ஒன்றியம் அச்சங்குடி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மு.நாயகம் கூறியதாவது: குடிநீர் தட்டுபாட்டை போக்க தனி திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைத்து காவிரி நீர் வழங்கபடும்.

தெருவிளக்குகள் அமைப்பேன். 100 நாள் வேலை திட்டத்தில் வெளிப்படையான நிர்வாகம் மேற்கொள்ளபடும். ஏழை மாணவர்களுக்கு அறக்கட்டளை அமைத்து கல்வி உதவி தொகை வழங்குவேன். மினி பஸ் போக்குவரத்தும், முதியோர் உதவி தொகையும் கிடைக்க செய்வேன். கிராமங்களில் தார், சிமெண்ட் சாலை அமைப்பேன். கிராமம்தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்துவேன். அரசு நல திட்டங்கள், மாணவர்களுக்கு சான்றிதழ் தாமதமின்றி கிடைக்கும். ஊராட்சி நிதியை முழுமையாக செலவிடுவேன். அனைவரது கருத்துகளை கேட்டு வளர்ச்சி பணிகளை செய்வேன் என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us