ADDED : ஆக 01, 2011 11:56 PM
தர்மபுரி: தர்மபுரியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சக்தி தலைமை வகித்தார். செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில், மாவட்ட துணை தலைவராக செந்தில், துணை செயலாளராக மகாலிங்கம், பொருளாளராக வின்னர் மற்றும் மாவட்ட அமைப்பாளராக வேடியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
'ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேககட்டுப்பாடு நிபந்தனையை தளர்த்த வேண்டும். ஆம்புலன்ஸில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் டெக்னீசியன்களை அரசு ஊழியாராக நியமிக்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றினர். பெருமாள், குமார், கோவிந்தன், கிருஷ்ணன், காளியப்பன், சரவணன், பெரியண்ணன், மகேந்திரன், ராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


