Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஏற்காடு மலையில் தீவிரவாதிகள் பதுங்கல்

ஏற்காடு மலையில் தீவிரவாதிகள் பதுங்கல்

ஏற்காடு மலையில் தீவிரவாதிகள் பதுங்கல்

ஏற்காடு மலையில் தீவிரவாதிகள் பதுங்கல்

ADDED : செப் 24, 2011 12:44 AM


Google News
சேலம்: ஏற்காடு மலையில் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு வந்த தவறான தகவலை அடுத்து, அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்ட வகையில் போலீஸாருக்கு, 1.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஏற்காடு மலை தொட்டிமடுவு பகுதியில் நேற்று முன்தினம் காலையில் ஐந்து பேர் துப்பாக்கியுடன் செல்வதை பார்த்ததாக அப்பகுதியை சேர்ந்த ராமர், வருவாய்த்துறை, வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பேரில் ஏ.டி.எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில் நான்கு டி.எஸ்.பி.,க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 120 பேர் ஏற்காடு மலைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் வந்து சென்றதற்கான தடையங்களோ, அடையாளங்கள் எதையும் போலீஸால் உறுதி படுத்த முடியால் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதை அடுத்து பொய்யான தகவல் அளித்தாக போலீஸார் ராமரை கைது செய்துள்ளனர். இது குறித்து எஸ்.பி., பாஸ்கரன் கூறியதாவது: ஏற்காடு பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து வந்த தவறான தகவலை அடுத்து சேலத்தில் இருந்து, 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீஸார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் போலீஸார் சென்ற வாகனங்களுக்கு டீஸல் செலவு, போலீஸாரின் சாப்பாட்டு செலவு, படி ஆகியவற்றில் மட்டும் போலீஸ்க்கு, 1.50 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இது போன்ற தவறான தகவல்களை போலீஸ்க்கு வழங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us