Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வால்பாறை நகராட்சி தலைவருக்கு 6 பேர் போட்டி

வால்பாறை நகராட்சி தலைவருக்கு 6 பேர் போட்டி

வால்பாறை நகராட்சி தலைவருக்கு 6 பேர் போட்டி

வால்பாறை நகராட்சி தலைவருக்கு 6 பேர் போட்டி

ADDED : அக் 05, 2011 02:16 AM


Google News
வால்பாறை : வால்பாறை நகராட்சியில் தலைவர் பதவிக்கு 6 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 127 பேரும் களத்தில் உள்ளனர். வால்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கு 7 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 150 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 15 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து இறுதியாக தலைவர் பதவிக்கு 6 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 127 பேரும் களத்தில் உள்ளனர்.

நகராட்சித்தலைவர் பதவிக்கு சத்தியவாணிமுத்து (தி.மு.க) செல்வி (அ.தி.மு.க), மலர் (காங்), விமலா (தே,மு.தி.க), சாந்தி (பு.த.) சிங்காரி (சுயே) ஆகிய 6 பேர் போட்டியிடுகின்றனர். கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., தி.மு.க., 21 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. காங்., 15 வார்டுகளிலும், தே.மு.தி.க, 12 வார்டுகளிலும், பா.ஜ., 4 வார்டுகளிலும், இ.கம்யூ., கட்சி 4 வார்டுகளிலும், ம.கம்யூ., கட்சி 1 வார்டிலும், ம.தி.மு.க., 5 வார்டுகளிலும், சுயே., வேட்பாளர்கள் 44 பேர் உட்பட மொத்தம் 127 பேர் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக 9வது வார்டில் 13 பேர் போட்டியிடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us