பி.டி.ஓ.,க்களுக்கு கலெக்டர் உத்தரவு
பி.டி.ஓ.,க்களுக்கு கலெக்டர் உத்தரவு
பி.டி.ஓ.,க்களுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 22, 2011 11:31 PM
ஆண்டிபட்டி : இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டுவோருக்கு
செலவுத்தொகையை பி.டி.ஓ.,க்கள் நேரடியாக பயனாளிகளிடம் வழங்க வேண்டும், என்று
கலெக்டர் பழனி சாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்திரா நினைவு குடியிருப்பு
திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் அரசு
வழங்குகிறது. கட்டு மானப்பணியில் அடித்தளம் முடிந்த பின்
10 ஆயிரம் ரூபாய், நிலை மட்டம் முடிந்த பின் 15 ஆயிரம், கூரை மட்டம்
முடிந்த நிலையில் 25 ஆயிரம், நிறைவு பெற்ற பின் 25 ஆயிரம் வழங்கப்பட
வேண்டும். கட்டுமானப்பணிகள் அந்தந்த நிலையில் முடிந்தாலும் பயனாளிகளுக்கு
காசோலை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு
விரைவாகவும், அலைக்கழிப்பு செய்யாமலும் வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


