Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/சுதந்திர நாளில் பணி: கடைகளுக்கு அபராதம்

சுதந்திர நாளில் பணி: கடைகளுக்கு அபராதம்

சுதந்திர நாளில் பணி: கடைகளுக்கு அபராதம்

சுதந்திர நாளில் பணி: கடைகளுக்கு அபராதம்

ADDED : ஆக 17, 2011 02:50 AM


Google News
மதுரை : தேசிய மற்றும் பண்டிகை நாட்களில் வியாபார தலங்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்.

இல்லையெனில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர். நேற்று முன்தினம் இதுபோன்ற நிறுவனங்கள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.மதுரைதொழிலாளர் நல கூடுதல் கமிஷனர் ராஜா, இணை கமிஷனர் ராதா கிருஷ்ணபாண்டியன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் என்.கோவிந்தன் ஆய்வு மேற்கொண்டார். விடுப்பு அளிக்காத 34 கடைகள், 12 ஓட்டல்கள், 9 பஸ்நிறுவனங்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டன.அதிகாரிகள் கூறுகையில், ''தேசிய, பண்டிகை நாட்களில் பணியாற்றுவோருக்கு முன்அனுமதியுடன் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். இல்லையெனில் முதல் முறை என்றால் அபராதமும், இரண்டாம் முறை தொடர்ந்தால் ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும்,'' என்றனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us