/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஊராட்சிகளில் 51 பேர் போட்டியின்றி தேர்வுஊராட்சிகளில் 51 பேர் போட்டியின்றி தேர்வு
ஊராட்சிகளில் 51 பேர் போட்டியின்றி தேர்வு
ஊராட்சிகளில் 51 பேர் போட்டியின்றி தேர்வு
ஊராட்சிகளில் 51 பேர் போட்டியின்றி தேர்வு
ADDED : அக் 06, 2011 09:40 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஒரு ஊராட்சி தலைவர், 31 ஊராட்சி வார்டு கவுன்சிலர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், போளீகவுண்டன்பாளையம் ஊராட்சியில் மட்டும் தலைவர் பதவிக்கு கிருஷ்ணகுமார் மட்டும் களத்திலுள்ளதால் போட்டியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 303 ஊராட்சி வார்டுகளில், 31 வார்டுக்கு போட்டியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 'அன்னபோஸ்ட்'டாகவுள்ள ஊராட்சி வார்டு விபரம் : ஆவலப்பம்பட்டியில், 1,4வது வார்டு, போடிபாளையத்தில் 9வது வார்டு, போளீகவுண்டன்பாளையத்தில் 3,4,5,6 ஆகிய வார்டுகள், என். சந்திராபுரத்தில் 3வது வார்டு, தேவம்பாடியில் முதல் வார்டு, காபுலிபாளையத்தில் 5வது வார்டு, கள்ளிபட்டியில் 1,2,3,5வது வார்டு, குள்ளிசெட்டிபாளையத்தில் 2, 8, 9வது வார்டு, மூலனூரில் 1,2,4,5,6வது வார்டு, ஒக்கிலிபாளையத்தில் முதல் வார்டு, புரவிபாளையத்தில் 2வது வார்டு, ராமபட்டிணத்தில் 5வது வார்டு, சந்தேகவுண்டன்பாளையத்தில் 4,5,6வது வார்டு, சேர்வகாரன்பாளையத்தில் 8வது வார்டு, வடக்கிபாளையத்தில் 8வது வார்டு ஆகிய வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியில்லை. மீதமுள்ள வார்டுகளிலும், ஊராட்சிகளிலும் தேர்தல் பணி விறு,விறுப்பாக நடக்கிறது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 20 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் போட்டியில்லாத ஊராட்சி வார்டுகள் விபரம் : கோமங்கலத்தில், முதல் வார்டு, கஞ்சம்பட்டியில் 1,5,9வது வார்டுகள், எஸ். நல்லூரில் 4,7வது வார்டுகள், பழையூரில் 1,3,4,6வது வார்டுகள், சீலக்காம்பட்டியில் 8வது வார்டு, சிஞ்சுவாடியில் 8,9வது வார்டுகள், தென்குமாரபாளையத்தில் 2வது வார்டு, ஊஞ்சவேலாம்பட்டியில் 6வது வார்டு, வீரல்பட்டியில் 2வது வார்டு, ஜமீன்கோட்டாம்பட்டியில் 1,8,9வது வார்டுகள், தொண்டாமுத்தூரில் 8வது வார்டுகளில் போட்டியில்லாமல் உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். தேர்தல் நடக்கும் மற்ற இடங்களில், களத்திலுள்ள வேட்பாளர்கள் பிரசாரத்தை வேகப்படுத்தியுள்ளனர்.


