/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அன்பளிப்பு மழையால் வாக்காளர்கள் வெற்றிக்காக வேட்பாளர்கள் தாராளம்அன்பளிப்பு மழையால் வாக்காளர்கள் வெற்றிக்காக வேட்பாளர்கள் தாராளம்
அன்பளிப்பு மழையால் வாக்காளர்கள் வெற்றிக்காக வேட்பாளர்கள் தாராளம்
அன்பளிப்பு மழையால் வாக்காளர்கள் வெற்றிக்காக வேட்பாளர்கள் தாராளம்
அன்பளிப்பு மழையால் வாக்காளர்கள் வெற்றிக்காக வேட்பாளர்கள் தாராளம்
ADDED : அக் 03, 2011 11:58 PM
சிறுபாக்கம் : உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக வேட்பாளர்களின் 'தாராள' மனசால் கிராமங்களில் பொழிந்து வரும் பரிசுமழையால் வாக்காளர்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.உள்ளாட்சித் தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 22ம் தேதி முதல் 29ம் தேதிவரை நடந்தது.அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 6,492 பதவிகளுக்கு மொத்தம் 24,912 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்கள் கடந்த 30ம் தேதி நடந்த பரிசீலனையில் 268 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், நகராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர், பேரூராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் என அனைத்து பதவிகளுக்கும் ஐந்து முதல் 7 பேர் வீதம் போட்டியிடுவதால் அனைத்து பதவிகளுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.கடந்த தேர்தலில் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இந்தத் தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களை கவர ஒவ்வொரு வேட்பாளர்களும் பல்வேறு அன்பளிப்புகளை களமிறக்க துவங்கியுள்ளனர்.
வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானதாக உள்ளது. இதனால் பெண் வாக்காளர்களை கவர 5 நபர் கொண்ட குடும்பத்திற்கு 2 கிராம் மோதிரமும், இரு நபர் கொண்ட குடும்பத்திற்கு குக்கரும், டேபிள் பேனும், தனிநபர் வாக்காளர்களைக் கவர எதிர் வரும் தீபாவளியை கருத்தில் கொண்டு புத்தாடைகளும் வழங்க உள்ளனர்.மேலும் குடிமகன்களை கவர டாஸ்மாக் சரக்குகள் நாள்தோறும் வினியோகம் செய்யப்படுகின்றன.கிராமங்களில் உள்ள முதியோர்கள், சுயஉதவி குழுக்கள், நற்பணி மன்றங்களை குறிவைத்து உறுப்பினர்களை கவனிக்கும் பணியும் துவங்கியுள்ளனர்.உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் கவனித்து வருகின்றனர். 700 வாக்காளர்கள் கொண்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டு ஒன்றுக்கு 500 ரூபாய் வரை தர தயாராகி வருகின்றனர்.கிராமத்திலுள்ள வாக்காளர்கள் வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என நான்கு ஓட்டுகள் அளிக்க வேண்டும்.ஊராட்சித் தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தான் மிக அதிக அளவில் செலவு செய்து வருவதால் கிராமப்புற வாக்காளர்கள் அன்பளிப்பு மழையால் திக்குமுக்காடி வருகின்றனர்.


