/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/உட்கட்சி பூசல் தவிர்க்க படைவீடுசேர்மன் பதவி கூட்டணிக்கு ஒதுக்கல்உட்கட்சி பூசல் தவிர்க்க படைவீடுசேர்மன் பதவி கூட்டணிக்கு ஒதுக்கல்
உட்கட்சி பூசல் தவிர்க்க படைவீடுசேர்மன் பதவி கூட்டணிக்கு ஒதுக்கல்
உட்கட்சி பூசல் தவிர்க்க படைவீடுசேர்மன் பதவி கூட்டணிக்கு ஒதுக்கல்
உட்கட்சி பூசல் தவிர்க்க படைவீடுசேர்மன் பதவி கூட்டணிக்கு ஒதுக்கல்
ADDED : அக் 02, 2011 12:34 AM
பள்ளிபாளையம்: 'உட்கட்சி பூசலை தவிர்க்க, படைவீடு டவுன் பஞ்சாயத்து சேர்மன்
பதவி, கூட்டணி கட்சியான மார்க்சிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது' என,
தே.மு.தி.க.,வினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.பள்ளிபாளையம் அருகே
படைவீடு டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அவற்றில், கவுண்டர்
சமுதாயப் பிரிவு ஓட்டு கணிசமான அளவில் உள்ளது. பிற சமூகத்தாரின் ஓட்டு
குறைந்த எண்ணிக்கையில் உள்ளது.எனவே, கவுண்டர் சமுதாய பிரிவினரின் ஓட்டைக்
குறி வைத்து அ.தி.மு.க., தி.மு.க.,வினர், டவுன் பஞ்சாயத்து சேர்மன்
வேட்பாளரை அறிவித்துள்ளனர். ஆனால், தே.மு.தி.க.,வில் மாற்று சமுதாயப்
பிரிவைச் சேர்ந்த காளியப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதையறிந்த
தே.மு.தி.க.,வினர், டவுன் பஞ்சாயத்து, 15 வார்டுகளிலும் தே.மு.தி.க.,வினர்
கணிசமான அளவில் உள்ளனர். அதனால், கவுண்டர் சமுõதய பிரிவைச் சேர்ந்த
வேட்பாளரை அறிவித்தால், சேர்மன் பதவியை கைப்பற்ற வாய்ப்பாக அமையும் என,
கட்சித் தலைமைக்கு ஃபேக்ஸ் அனுப்பியுள்ளனர்.
அதையடுத்து, உட்கட்சி பூசலை தவிர்க்க, படைவீடு டவுன் பஞ்சாயத்து சேர்மன்
பதவி, கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது
என, தே.மு.தி.க.,வினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.


