/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி தேர்தல் எதிரொலி போலீஸ் ஸ்டேஷன்கள் "பளிச்'உள்ளாட்சி தேர்தல் எதிரொலி போலீஸ் ஸ்டேஷன்கள் "பளிச்'
உள்ளாட்சி தேர்தல் எதிரொலி போலீஸ் ஸ்டேஷன்கள் "பளிச்'
உள்ளாட்சி தேர்தல் எதிரொலி போலீஸ் ஸ்டேஷன்கள் "பளிச்'
உள்ளாட்சி தேர்தல் எதிரொலி போலீஸ் ஸ்டேஷன்கள் "பளிச்'
ADDED : செப் 29, 2011 12:28 AM
பழநி : உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போலீஸ் ஸ்டேஷன்களை 'பளிச்' என, பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மனுதாக்கல் இன்று முடியும் நிலையில், போலீஸ் ஸ்டேஷன்களை சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்காக போலீஸ் உயர் அதிகாரிகள், எந்த நேரமும் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதால், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., க்கள், இதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி, ஸ்டேஷன் வளாகத்தில் அழகுச்செடிகள் தவிர்த்த புல், புதர்களை அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து அறைகளையும் சுத்தமாக பராமரிக்கவும்; வளாகத்தில் நிற்கும், வழக்கு தொடர்புடைய வாகனங்களில் விபரங்களை எழுதவும்; பிற வாகனங்களை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, போலீஸ் ஸ்டேஷன்கள் புதுப்பொலிவு பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதே நிலையை தொடர்ந்து கையாள, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


