/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நான்காவது நாளாக விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்நான்காவது நாளாக விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்
நான்காவது நாளாக விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்
நான்காவது நாளாக விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்
நான்காவது நாளாக விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்
ADDED : செப் 26, 2011 10:45 PM
சூலூர் : சூலூர், சோமனூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி, நான்காவது நாளாக நேற்றும் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர்.நூறு சதவீதம் கூலி உயர்வு கோரி கடந்த 30ம் தேதி முதல் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர் கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூலி உயர்வு குறித்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை. தங்களுக்கு நியாயமான கூலி உயர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரவும், முதல் கட்டமாக குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை சோமனூர், சூலூர், மங்கலம், பல்லடம், தெக்கலூர், அவிநாசி உள்ளிட்ட இடங்களில் உண்ணாவிரதத்தை துவக்கினர்.சூலூரில் கண்ணம்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்து வரும் உண்ணாவிரதம் நேற்று 4வது நாளாக தொடர்ந்தது. விசைத்தறியாளர் சங்க தலைவர் பொன்னுசாமி தலைமையில், செயலாளர் செந்தில்குமார் உட்பட நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று ம.தி.மு.க., மாவட்ட துணைச்செயலாளர் கருணாநிதி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். நேற்று முன்தினம் சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்முடி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், மாநகர தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர்.சோமனூரில் சங்கத்தலைவர் பழனிசாமி, செயலாளர் குமாரசாமி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் உண்ணாவிரதம் இருந்தனர். உள்ளாட்சி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் போராட்டக்குழுவினர் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் 28வது நாளாக தொடருவதால், 700 கோடி ரூபாய் மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.