/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையை குறைக்க கோரிக்கைபயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையை குறைக்க கோரிக்கை
பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையை குறைக்க கோரிக்கை
பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையை குறைக்க கோரிக்கை
பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையை குறைக்க கோரிக்கை
ADDED : செப் 25, 2011 11:00 PM
கிள்ளை:கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்தப்படும் விவசாய பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிதம்பரம் அருகே உள்ள விவசாயிகள் பாசிமுத்தான் ஓடை மற்றும் கான்சாகிப் வாய்க்கால் மூலம் வரும் காவிரி தண்ணீரை நம்பி 14 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்து வருகின்றனர்.சம்பா பருவத்தில் மழை நீர் தேங்கியும், நவரை சாகுபடிக்கு போதுமான தண்ணீர் இல்லாமலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை சரி கட்டும் வகையில் இழப்பீட்டுத் தொகை வழங்கவும், கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பெறும் விவசாய கடன்களுக்கு பயிர்பாதுகாப்புத் தொகை செலுத்தவும் அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் விவசாயிகள் பதிவு செய்து காப்பீட்டுத் தொகை செலுத்தி வந்தனர்.
கிள்ளை, தில்லைவிடங்கன், சி.முட்லூர் மற்றும் பிச்சாவரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். தற்போது இழப்பீட்டுத் தொகை 5 மடங்காக உயர்த்தி அரசு திடீர் உத்தரவிட்டுள்ளது.இதனால் வங்கியில் பெறும் கடன் தொகைக்கு தனியாரிடம் பெறும் வட்டித் தொகையை விட இந்த காப்பீட்டுத் தொகை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.மேலும், அரசு முறைப்படி அறிவிக்காமல் கலெக்டர்கள் மூலம் சம்மந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பீடு ஏற்படும் நிலை உள்ளது.ஒரு சதவீதத்தை எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ஐந்து மடங்காக அறிவித்திருப்பது விவசாயிகளை கடும் பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ளது. எனவே இந்த தொகையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.