Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/நில மோசடி வழக்கில் தி.மு.க., பிரமுகர் மனைவி உட்பட இருவர் கைது

நில மோசடி வழக்கில் தி.மு.க., பிரமுகர் மனைவி உட்பட இருவர் கைது

நில மோசடி வழக்கில் தி.மு.க., பிரமுகர் மனைவி உட்பட இருவர் கைது

நில மோசடி வழக்கில் தி.மு.க., பிரமுகர் மனைவி உட்பட இருவர் கைது

ADDED : செப் 22, 2011 12:30 AM


Google News

காஞ்சிபுரம் : நில மோசடி வழக்கில், தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரின் மனைவி உட்பட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

ஒன்றிய கவுன்சிலரை தேடி வருகின்றனர். திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவரது தந்தை கதிர்வேல்(எ)சிவப்பிரகாசம். இவருக்கு, செங்கல்பட்டு அடுத்த வேதநாராயணபுரம் கிராமத்தில், 2 ஏக்கர் 22 சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் பட்டா, சிவப்பிரகாசம் என்ற பெயரில் இருந்தது. பட்டாவை கதிர்வேல் என்ற பெயருக்கு மாற்றக் கோரி, 1986ம் ஆண்டு கதிர்வேல், அப்பகுதியைச் சேர்ந்த, மறைந்த கிராம நிர்வாக அலுவலர் கணேசமூர்த்தியை அணுகியுள்ளார். கணேசமூர்த்தி, ரியல் எஸ்÷ட்ட தொழில் செய்து வந்த, செங்கல்பட்டு வேதாசல நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம்,65, வேண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க., துணைச் செயலருமான திருமலை ஆகியோர் சேர்ந்து, அந்த நிலத்திற்கு, போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளனர்.



சென்னை மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சிவப்பிரகாச முதலியார் என்பவர், பாலசுப்பிரமணியத்திற்கு நிலத்தை விற்றது போல், கதிர்வேல் நிலத்தை கிரயம் செய்துள்ளனர். பின், அந்த நிலத்தை, திருமலை மனைவி நிந்திமதி வாங்குவது போலவும், அவர் திருமலைக்கு நிலத்தை வழங்கியது போலவும், ஆவணங்கள் தயார் செய்துள்ளனர். இது குறித்து, தமிழ்மணி விசாரித்த போது, சென்னை மயிலாப்பூர் முகவரியில், சிவப்பிரகாச முதலியார் என்ற பெயரில் யாரும் வசிக்காதது தெரிந்தது. ஆள்மாறாட்டம் செய்து, தனது தந்தையின் நிலம் விற்பனை செய்யப்பட்டதை அறிந்தார். இது குறித்து, காஞ்சிபுரம் எஸ்.பி., மனோகரனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் மோகனவேல், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில், தமிழ்மணி தந்தை பெயரிலிருந்த நிலம், போலி ஆவணங்கள் தயாரித்து, ஆள் மாறாட்டம் செய்து அபகரிக்கப்பட்டது தெரிய வந்தது. பாலசுப்பிரமணியம், நிந்திமதி, 38, கைது செய்யப்பட்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us