/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மலேரியா மையத்தில் ரத்தம் சேகரிக்க மறுப்பு : நோயாளிகள் தவிப்புமலேரியா மையத்தில் ரத்தம் சேகரிக்க மறுப்பு : நோயாளிகள் தவிப்பு
மலேரியா மையத்தில் ரத்தம் சேகரிக்க மறுப்பு : நோயாளிகள் தவிப்பு
மலேரியா மையத்தில் ரத்தம் சேகரிக்க மறுப்பு : நோயாளிகள் தவிப்பு
மலேரியா மையத்தில் ரத்தம் சேகரிக்க மறுப்பு : நோயாளிகள் தவிப்பு
ADDED : செப் 15, 2011 09:13 PM
கீழக்கரை : கீழக்கரை மலேரியா மையத்தில் ரத்த பரிசோதனை செய்ய மறுத்ததால் நோயாளிகள் தவித்தனர்.
கீழக்கரை தெற்கு தெரு முஸ்தக்கீம், 16. சிக்கல் பள்ளிவாசல் தெரு சாகுல் ஹமீது, 19. புதுமாயாகுளம் வினோத்குமார், 16. கடந்த மூன்று நாட்களாக காய்ச்சலில் தவித்தனர். கீழக்கரையில் ரத்த சேகரிப்பு மையத்திற்கு நேற்று காலை சென்றனர். அங்கிருந்த டெக்னீசனிடம் ரத்த பரிசோதனை செய்ய கோரினார். டெக்னீசன் மறுத்தார். ரத்த சேகரிப்பு டெக்னீசன் கணேச மூர்த்தி கூறியதாவது: தினமும் 60 பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள முடியும். அந்த இலக்கு முடிவடைந்ததால் ரத்தம் பரிசோதனை செய்ய இயலாது, என்றார். மாவட்ட இணை இயக்குனர் உமா மகேஸ்வரி கூறியதாவது: அரசால் எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. எத்தனை நோயாளிகள் வந்தாலும் ரத்தம் எடுத்து பரிசோதிக்க வேண்டும், என்றார். உடனடியாக ரத்தம் சேகரிக்குமாறு டெக்னீசனுக்கு உத்தரவிட்டார்.