/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசியில் மழை: வீடுகளில் கழிவுநீர்சிவகாசியில் மழை: வீடுகளில் கழிவுநீர்
சிவகாசியில் மழை: வீடுகளில் கழிவுநீர்
சிவகாசியில் மழை: வீடுகளில் கழிவுநீர்
சிவகாசியில் மழை: வீடுகளில் கழிவுநீர்
ADDED : செப் 13, 2011 10:07 PM
சிவகாசி : சிவகாசியில் பெய்த மழையால் வீடுகளில் கழிவு நீர் புகுந்தது.சிவகாசியில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணிவரை மழை பெய்தது.
இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. பல மாதங்களுக்கு பின் நேற்று பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகாசி ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சி 2வது வார்டு முத்துராமலிங்கபுரம் காலனியில் மழை நீர் செல்ல வழியில்லாமல் வீடுகளில் முன்பு தேங்கியது. இப்பகுதியில் உள்ள சோனையாபுரம், பர்மாகாலனி, காமராஜபுரம், நேஷனல் காலனி பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் சேர்ந்து, முத்துராமலிங்கம்புரம் காலனி வாறுகால் வழியாக கடம்பன்குளத்தில் வந்து சேரும். வாறுகால் முறையாக சுத்தம் செய்யததால், பலரும் தங்கள் வீடுகளில் முன்பு வாறுகாலை அடைத்து விட்டனர்.இதனால் கழிவு நீர் கடந்து செல்ல வழியில்லை. லேசான மழை பெய்தாலும் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுகிறது. நேற்று பெய்த மழையில் இங்குள்ள தீப்பெட்டி ஆலையில் மழைநீருடன், கழிவு நீரும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் வெளியேறினர். முத்துராமலிங்கபுரம் காலனி தெருவில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் முன்பு மழைநீர் தேங்கியது.கார்த்திக் பாண்டியன் கூறுகையில், ''வாறுகால் சிறிதாக உள்ளது. மாதத்திற்கு ஒருமுறை கூட துப்புரவு பணி நடப்பது இல்லை. கழிவு நீர் கடந்து செல்ல வழியில்லாத நிலையில், சிறு மழை பெய்தாலும் வீடுகளுக்குள் சாக்கடை கழிவு புகுந்து மக்களை சிரமப்படுத்துகிறது. கழிவு நீர் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாறுகால் வசதி செய்திட வேண்டும்,'' என்றார்.