Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/அரசியலாக்கப்பட்ட தொல்லியல் துறை தடை உத்தரவு: மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறை விளக்கம்

அரசியலாக்கப்பட்ட தொல்லியல் துறை தடை உத்தரவு: மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறை விளக்கம்

அரசியலாக்கப்பட்ட தொல்லியல் துறை தடை உத்தரவு: மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறை விளக்கம்

அரசியலாக்கப்பட்ட தொல்லியல் துறை தடை உத்தரவு: மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறை விளக்கம்

ADDED : ஆக 01, 2011 01:41 AM


Google News

சென்னை : தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு குறிப்பிட்ட தூரத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு, மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறை புதிய விளக்கம் அளித்துள்ளது.நாடு முழுவதும் புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகில் புதிய குடியிருப்புகள் அதிகளவில் உருவாகிவிட்டன.

இதனால், தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதிலும், புராதன சின்னங்களை பாதுகாப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் உருவாகின.



இதை கருத்தில் கொண்டு மத்திய அரசின் கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறை, புராதன சின்னங்கள் மற்றும் தொல்லியல் துறை எச்சங்களை பாதுகாப்பது குறித்து, 2010ல் ஒரு சட்டம் கொண்டு வந்தது.இந்த சட்டம் அமலுக்கு வந்தவுடன், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில், 100 மீட்டர் தூரத்திற்குள் எந்த கட்டடமும் கட்டக்கூடாது என்றும், 101 முதல் 300 மீட்டர் தூரம் வரை உள்ள இடத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதாக இருந்தாலும், பழைய கட்டடத்தை புதுப்பிப்பதாக இருந்தாலும், தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.



இந்த சட்டத்தின் கீழ், தமிழகத்தில் 27 மாவட்டங்கள் இடம் பெற்றுள் ளன. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமான இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சென்னையிலும், அதை ஒட்டிய பல பகுதிகளும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட பழைய பல்லாவரத்தில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சில பகுதிகள் உள்ளன. இங்கு புராதன சின்னங்கள் பல உள்ளன. பாதாள அறைகள் மற்றும் பழமையான கோவில்களும் உள் ளன. தொல்லியல் துறை சார்ந்த பகுதிகள், நகராட்சியின் 11, 12, 13 ஆகிய வார்டுகளை உள்ளடக்கியுள்ளன. தொல்லியல் துறை தடை உத்தரவு காரணமாக இங்கு, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானதால், அரசியல் கட்சியினர் இந்த விஷயத்தை அரசியலாக்கினர்.இது குறித்து, கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறை அளித்துள்ள ஒரு விளக்கத்தில், 'புராதன சின்னங்களை பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு இயற்றியுள்ள சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு பெரும் கால அவகாசம் தேவை.



இப்பிரச்னைக்கு தற்காலிகத் தீர்வாக கட்டடப் பணிகளை செய்ய வேண்டுமானால், சம்பந்தப்பட்டவர்கள் சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் மூலம் தடையில்லா சான்றிதழ் பெற்றுக்கொள்ள தொல்லியல் துறை வழி வகுத்துள்ளது' என்று கூறியுள்ளது.இது குறித்து தொல்லியல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''நாட்டின் பல்வேறு பகுதிகளில் வானுயர கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதை தடுக்கும் வகையில் தான் இந்த சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், தற்போது 100 மீட்டர், 300 மீட்டர் தூரத்தில் இருப்பவர்கள் பீதியடையத் தேவையில்லை. தொல்லியல் துறை கண்காணிப்பாளர்களை உஷார்படுத்தும் வகையில் இந்த சட்டம் அமைந்துள் ளது.''ஏனெனில், தடை உத்தரவு அமலுக்கு வந்த பிறகு, குறிப்பிட்ட பகுதியில் யாராவது கட்டடம் கட்டினால், தொல்லியல் துறை கண்காணிப்பாளருக்கு மூன்றாண்டுகள் வரை ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்க இந்த சட்டத்தில் இடமிருப்பது குறிப்பிடத்தக்கது,'' என்றார்.



கே.எஸ்.வடிவேலு







      Our Apps Available On




      Dinamalar

      Follow us