/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சட்டத்தை முறிக்கக் கூடாது : ஐகோர்ட் நீதிபதி பேச்சுசட்டத்தை முறிக்கக் கூடாது : ஐகோர்ட் நீதிபதி பேச்சு
சட்டத்தை முறிக்கக் கூடாது : ஐகோர்ட் நீதிபதி பேச்சு
சட்டத்தை முறிக்கக் கூடாது : ஐகோர்ட் நீதிபதி பேச்சு
சட்டத்தை முறிக்கக் கூடாது : ஐகோர்ட் நீதிபதி பேச்சு
ADDED : ஆக 14, 2011 10:21 PM
பழநி : ''நீதியை நிலைநாட்ட சட்டத்தை வளைக்கலாம்.
ஆனால் முறிக்கக்கூடாது,'' என, சென்னை ஐகோர்ட் நீதிபதி தமிழ்வாணன் தெரிவித்தார். பழநியில் நீதித்துறை நடுவர் நிலையிலான விரைவு கோர்ட் துவக்க விழா நடந்தது.
இதை துவக்கி வைத்து அவர் பேசியது: கடமையை முறையாக நிறைவேற்றுவதே, அனைவரின் முதல் கடமை. நீதிபதிகளும், வக்கீல்களும் நாணயத்தின் இரு பக்கங்கள். நத்தம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள கோர்ட்களுக்கு, சொந்த கட்டடம் இல்லை. திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டையில் தன்னிறைவான கோர்ட் கட்டடங்கள் அமைக்கப்படும். வக்கீல்கள் அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தாலும், சமுதாய மேம்பாடுக்காக உழைக்க வேண்டும். கட்டடம், சட்ட புத்தகத்தால் மட்டும் நீதி கிடைத்து விடாது. முறையாக மக்களை சென்றடையும் வகையில், வக்கீல்கள் செயல்பட வேண்டும். தாமதிக்கப்பட்ட தீர்வு, மறுக்கப்பட்ட நீதி என்பதே நிதர்சனம். குற்றம் வழக்கு பதிவு செய்வதில், போலீசார் தாமதம் செய்யக்கூடாது. சட்டத்திற்கு மிஞ்சியது எதுவுமில்லை. நீதியை நிலைநாட்டுவதில், அது ஏவலாளியாக இருக்கும். அதை நியாயத்திற்காக வளைக்கலாம்; ஆனால் முறிக்கக் கூடாது, என்றார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முருகன், முதன்மை குற்றவியல் மாஜிஸ்திரேட் வெங்கடாஜலபதி, சந்திரசேகரன் எஸ்.பி., ஆர்.டி.ஓ., வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம், பழநி வக்கீல் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.