/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பில்லூர் முதல் குடிநீர் திட்டம் மேம்படுத்த ரூ.15 கோடிபில்லூர் முதல் குடிநீர் திட்டம் மேம்படுத்த ரூ.15 கோடி
பில்லூர் முதல் குடிநீர் திட்டம் மேம்படுத்த ரூ.15 கோடி
பில்லூர் முதல் குடிநீர் திட்டம் மேம்படுத்த ரூ.15 கோடி
பில்லூர் முதல் குடிநீர் திட்டம் மேம்படுத்த ரூ.15 கோடி
ADDED : ஆக 12, 2011 02:05 AM
மேட்டுப்பாளையம் : ''பில்லூர் முதல் குடிநீர் திட்டப்பணிகளை மேம்படுத்த 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்,'' என, கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார்.
பில்லூர் அணையில் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் முதல் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தையும், வெள்ளியங்காட்டில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் கலெக்டர் கருணாகரன் நேற்று ஆய்வு செய்தார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய புனரமைப்பு நிதி, ஒரு கோடி ரூபாயில் கடந்தாண்டு 325 எச்.பி., திறன் கொண்ட ஆறு மின் மோட்டார்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில், நான்கு மோட்டார்கள் தொடர்ந்து இயங்குவதால், நிமிடத்துக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் 'பம்பிங்' செய்யப்படுகிறது. இந்த மோட்டார் வாங்குவதற்கு முன் மின் கட்டணம் 30 லட்சம் ரூபாய் வந்துள்ளது. புதிய மோட்டார் வாங்கிய பின், 24 லட்சம் ரூபாய் தான் கட்டணம் வருகிறது; மாதம் ஆறு லட்சம் ரூபாய் மிச்சமாகிறது. புதிய மின் மோட்டார்களுக்கு 16.50 லட்சம் ரூபாயில் மின் வயர்களும், 6.50 லட்சம் ரூபாய்க்கு நவீன வசதியுடன் கூடிய எலக்ட்ரிக் டிராலியும் வாங்கப்படும். வெள்ளியங்காட்டில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்த உபகரணங்கள் வாங்குவதற்கு 51 லட்சம் ரூபாய், நீர் உந்து நிலையத்தை மேம்படுத்த 10 லட்சம் ரூபாய், கோவைக்கு குடிநீர் செல்லும் மெயின் குழாயை மாற்ற 14 கோடி ரூபாய் என,மத்திய அரசின் புனரமைப்பு நிதியிலிருந்து மொத்தமாக 14 கோடியே 84 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். ஒராண்டுக்குள் இப்பணிகள் செய்து முடிக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் கருணாகரன் கூறினார்.


