/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நுகர்பொருள் கிடங்கால் குடிநீர் குழாய்கள் "டமால்'நுகர்பொருள் கிடங்கால் குடிநீர் குழாய்கள் "டமால்'
நுகர்பொருள் கிடங்கால் குடிநீர் குழாய்கள் "டமால்'
நுகர்பொருள் கிடங்கால் குடிநீர் குழாய்கள் "டமால்'
நுகர்பொருள் கிடங்கால் குடிநீர் குழாய்கள் "டமால்'
ADDED : ஜூலை 28, 2011 12:41 AM
மேட்டுப்பாளையம் : நுகர்பொருள் கிடங்கால் குடியிருப்பு பகுதி குடிநீர் குழாய்கள் சேதமடைவதால், பொது மக்கள் ஆவேசமடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் ராஜபுரத்தில் அதிக குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் தனியார் வாடகைக் கட்டடத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு உள்ளது. இதனால், அதிகளவில் லாரிகள் கிடங்கிற்கு செல்வதால், ரோடு மட்டுமில்லாமல், குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகின்றன; போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, வாணிபக்கழக கிடங்கை அரசு சேமிப்பு கிடங்கு கட்டடத்துக்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபுரம் பகுதி கவுன்சிலர் காயத்திரி மற்றும் பொது மக்கள் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கில் உள்ள ரேஷன் பொருட்கள் வைத்திருப்பதால் பூச்சிகள் அதிகளவில் வருகின்றன. அதிக எடையுள்ள லாரிகள் வருவதால் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது.
உடைந்த குழாயை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் தண்ணீரை நிறுத்துவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. குடியிருப்புப் பகுதியில் உள்ள இந்த கிடங்கை, அரசு சேமிப்பு கிடங்குக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


