Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பெண்ணின் வயிற்றிலிருந்து 10 கிலோ கட்டி அகற்றம்

பெண்ணின் வயிற்றிலிருந்து 10 கிலோ கட்டி அகற்றம்

பெண்ணின் வயிற்றிலிருந்து 10 கிலோ கட்டி அகற்றம்

பெண்ணின் வயிற்றிலிருந்து 10 கிலோ கட்டி அகற்றம்

ADDED : அக் 09, 2011 02:25 AM


Google News
கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணின் வயிற்றிலிருந்த 10.5 கிலோ கட்டியை டாக்டர்கள் குழுவினர் அகற்றி சாதனை படைத்தனர்.

கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இதில் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராள மானோர் பயனடைந்து வருகின்றனர். மேலும் இங்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளும், ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவில்பட்டி பண்ணைத்தோட்டத் தெருவை சேர்ந்த வெல்டிங் கூலித்தொழிலாளியான ராமசாமி மனைவி சண்முகத்தாய் (48) என்பவர் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார். மேலும் அவர் கடந்த ஓராண்டாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், பல்வேறு சிகிச்சைகள் செய்தும் பலனில்லை என்றும் டாக்டர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து சண்முகத்தாயின் வயிற்றை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் ஸ்கேன் செய்து பார்த்ததில் வயிற்றில் மிகப்பெரிய கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சண்முகத்தாய்க்கு ஆபரேசன் செய்து கட்டியை அகற்ற முடிவெடுத்தனர். தொடர்ந்து நேற்று (8ம் தேதி) கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி டாக்டர்கள் ருக்மணி, ஸ்ரீவெங்கடேஷ், செவிலியர்கள் சுஜாதா, சாவித்ரி, உதவியாளர் கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சண்முகத்தாய் க்கு ஆபரேசன் செய்தனர். அப்போது உயிருக்கு ஆப த்து ஏற்படுத்தும் நிலையிலிருந்த சுமார் 10.5 கிலோ எடை கொண்ட மூன்று கட்டிகளை டாக்டர்கள் அகற்றினர். தொடர்ந்து சண்முகத்தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித் து அரசு டாக்டர்கள் குழுவினர் கூறியதாவது, பொதுவாக இதுபோன்ற கடினமா ன ஆபரேசன்கள் திருநெல்வேலி பாளை அரசு ஆஸ்பத்திரி அல்லது நவீன வசதிகள் கொண்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் மட்டுமே நடைபெறுமென பொதுமக்கள் கருதுகின்றனர். ஆனால் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியிலேயே ஆபரேசன் செய்து கொள்ளும் வசதிகள் உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us