/உள்ளூர் செய்திகள்/சேலம்/அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி "குடிநீர் பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு'அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி "குடிநீர் பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு'
அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி "குடிநீர் பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு'
அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி "குடிநீர் பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு'
அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி "குடிநீர் பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு'
ADDED : அக் 04, 2011 01:07 AM
சேலம்: சேலம் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், குடிநீர் பிரச்னைக்கு
நிச்சயம் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்'' என்று அ.தி.மு.க., மேயர்
வேட்பாளர் சவுண்டப்பன் கூறியுள்ளார். சேலம் மாநகராட்சி அ.தி.மு.க., மேயர்
வேட்பாளர் சவுண்டப்பன், நேற்று மாலை, 47 மற்றும் 48வது வார்டுகளில் திறந்த
ஜீப்பில் சென்று ஓட்டு சேகரித்தார். அவருடன் சேலம் மாநகர், மாவட்ட செயலாளர்
செல்வராஜ், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ.,
வெங்கடாசலம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் சென்றனர்.
பிரச்சாரத்தின் போது, சவுண்டப்பன் கூறியதாவது: அ.தி.மு.க., பொது செயலாளர்
ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி நடந்து வருகிறது. அதனால், உள்ளாட்சி
தேர்தலில் அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைக்கும். இந்த
வெற்றியின் மூலம் ஏழைகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும்
வகையில் திட்டங்கள் தீட்டப்படும். சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர்
பிரச்னையை தீர்க்க, தனிக்குடிநீர் திட்டம் உடனே நிறைவேற்ற அனைத்து
முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
குடிநீர் வினியோகம் செய்யபப்டும். இவ்வாறு கூறினார்.


