Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாங்காடு தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் களமிறங்கினார் அதிருப்தி வேட்பாளர்

மாங்காடு தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் களமிறங்கினார் அதிருப்தி வேட்பாளர்

மாங்காடு தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் களமிறங்கினார் அதிருப்தி வேட்பாளர்

மாங்காடு தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் களமிறங்கினார் அதிருப்தி வேட்பாளர்

ADDED : செப் 27, 2011 10:59 PM


Google News

மாங்காடு : மாங்காடு பேரூராட்சி அதிகாரப்பூர்வ தலைவர் வேட்பாளரை எதிர்த்து, தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், ஜபருல்லா, சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாங்காடு பேரூராட்சித் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் ஜபருல்லா. உள்ளாட்சித் தேர்தலில் இருவரும், பேரூராட்சித் தலைவர் பதவிக்கு விருப்ப மனு போட்டனர். இதில், பேரூராட்சித் தலைவராக மீண்டும் சீனிவாசன் போட்டியிட தி.மு.க., தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மாங்காடு பகுதியில் சிறுபான்மை மற்றும் சில அமைப்புகளின் ஆதரவுடன் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக, ஜபருல்லா அறிவித்தார். நேற்று காலை, தன் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த ஜபருல்லா, பேரூராட்சித் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக மனு தாக்கல்

செய்தார். அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து, ஜபருல்லா தேர்தலில் போட்டியிடுவதால், தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் வலுத்துள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us