/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வார்டு வேட்பாளர் பட்டியலும் தயார் : அ.தி.மு.க., வினர் உற்சாகம்வார்டு வேட்பாளர் பட்டியலும் தயார் : அ.தி.மு.க., வினர் உற்சாகம்
வார்டு வேட்பாளர் பட்டியலும் தயார் : அ.தி.மு.க., வினர் உற்சாகம்
வார்டு வேட்பாளர் பட்டியலும் தயார் : அ.தி.மு.க., வினர் உற்சாகம்
வார்டு வேட்பாளர் பட்டியலும் தயார் : அ.தி.மு.க., வினர் உற்சாகம்
ADDED : செப் 21, 2011 10:55 PM
திண்டுக்கல் : மாநகராட்சி, நகராட்சி வார்டு வேட்பாளர் பெயர்களையும், அ.தி.மு.க., தலைமை முடிவு செய்து விட்டது.
இப்பட்டியல் இன்று அல்லது நாளை வெளியிடப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் வேட்பாளர்களை, அ.தி.மு.க., தலைமை அறிவித்துவிட்டது. இதனால் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளனர்.இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி வார்டு வேட்பாளர் பட்டியலும் தயாராகி விட்டது. ஒரு வார்டுக்கு இருவரின் பெயரை தலைமைக்கு பரிந்துரைத்து, மாவட்ட, நகர் செயலாளர்கள் ஏற்கனவே அனுப்பியுள்ளனர். இதிலிருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று அல்லது நாளை இப்பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து பேரூராட்சி, மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பட்டியலும் வெளியிடப்படும். இப்படியலும் இறுதி செய்யப்பட்டு வருகிறது.