/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/நகர்புற உள்ளாட்சியில் 1600 இ.வி.எம் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் தகவல்நகர்புற உள்ளாட்சியில் 1600 இ.வி.எம் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் தகவல்
நகர்புற உள்ளாட்சியில் 1600 இ.வி.எம் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் தகவல்
நகர்புற உள்ளாட்சியில் 1600 இ.வி.எம் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் தகவல்
நகர்புற உள்ளாட்சியில் 1600 இ.வி.எம் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் தகவல்
ADDED : செப் 15, 2011 11:50 PM
தூத்துக்குடி : நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 1600 இ.வி.எம் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சியை துவக்கி வைத்த கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் முடியும் தருவாயை எட்டியுள்ளது. தற்போது வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, காயல்பட்டணம் நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவுக்கு எலக்டிரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனை பயன்படுத்தும் முறை குறித்து நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இ.வி.எம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை கலெக்டர் ஆஷீஷ்குமார் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், முதல், முதலாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இ.வி.எம் முறையில் தேர்தல் நடக்கிறது. இது குறித்து தேர்தல் நடத்துவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியினை அவர்கள் நல்ல முறையில் பெற்று, வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பர். மொத்தம் ஆயிரத்து 600 இ.வி.எம்கள் இதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றார். பின்னர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இ.வி.எம் பயிற்சி நடந்தது. மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இன்ஜினியர் ராஜகோபாலன், எலக்ஷன் பி.ஏ லோகநாதன், மாநகராட்சி தேர்தல் பிரிவு கண்காணிப்பாளர் ஞானசேகரன், கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு மாசாணம், சிறப்பு பயிற்சியாளர்கள் வருவாய் அதிகாரி ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் திருமால்சாமி, ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


