ADDED : செப் 06, 2011 11:52 PM
திருவாடானை : தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க., கிளை செயலாளர் யூசுப் கொலை செய்யபட்டார்.
அவருடைய ஆதரவாளர்கள் இரண்டு கார்கள் மற்றும் கொலைக்கு காரணமான நாகூர்கனி என்பவருடைய வீட்டில் புகுந்துபொருட்களுக்கு தீ வைத்தனர். இது தொடர்பாக தொண்டியை சேர்ந்த முகமதுகாரிக் கொடுத்த புகாரின்படி சாகுல் உட்பட 15 பேரையும், வி.ஏ.ஓ. ராஜபாண்டி கொடுத்த புகாரின்படி எஸ்.பி.பட்டினம் கிராமத்தை சேர்ந்த அஜீத்அலி உட்பட 65 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.