/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/இசைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணிஇசைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
இசைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
இசைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
இசைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 06, 2011 01:04 AM
திருநெல்வேலி : நெல்லையில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இசைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தும், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வை வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்கள் பேரணி நடத்தினர்.
பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி அருகே பேரணி புறப்பட்டது. தலைமையாசிரியை சிவகாமிசெல்வி தலைமை வகித்தார். குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வில்லிசை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு தெருக்கள் வழியே சென்ற பேரணி பாளை. மகாராஜநகர் ஐந்தாவது குறுக்குத்தெருவில் உள்ள இசைப்பள்ளி முன் நிறைவு பெற்றது.
சேர்க்கை தீவிரம் : தலைமையாசிரியை சிவகாமிசெல்வி கூறும்போது, ''நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதம், வயலின், மிருதங்கம் 3 ஆண்டு சான்றிதழ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது. வயது வரம்பு 13 முதல் 25 வரை. ஆண்டுக்கட்டணம் 152 ரூபாய் மட்டும். ஸ்காலர்ஷிப் உண்டு. தேறியவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் உடனே பள்ளியில் சேரலாம்'' என்றார்.