Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புறவழிச்சாலை திட்டப் பணிகள் பண்ருட்டியில் கலெக்டர் ஆய்வு

புறவழிச்சாலை திட்டப் பணிகள் பண்ருட்டியில் கலெக்டர் ஆய்வு

புறவழிச்சாலை திட்டப் பணிகள் பண்ருட்டியில் கலெக்டர் ஆய்வு

புறவழிச்சாலை திட்டப் பணிகள் பண்ருட்டியில் கலெக்டர் ஆய்வு

ADDED : செப் 04, 2011 01:58 AM


Google News
பண்ருட்டி:பண்ருட்டி - உளுந்தூர்பேட்டை சாலையை இணைக்கும் புறவழிச்சாலை திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.பண்ருட்டி அரசு மருத்துவமனை பின்புறம், டேனிஷ் மிஷின் பள்ளி தானம் வழங்கிய இடத்தில் இருந்து டைவர்ஷன் ரோட்டை (உளுந்தூர்பேட்டை சாலை) இணைக்கும் தற்காலிக புறவழிச்சாலை பணிகள் குறித்து நேற்று கலெக்டர் அமுதவல்லி திடீரென ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அரசு மருத்துவமனை பின்புறம் டேனிஷ் மிஷின் தானம் வழங்கிய இடத்தில் இருந்து டைவர்ஷன் ரோடு செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள், தனியார் பட்டாக்கள், அரசு இடங்கள், வளைவுகள் குறித்து ஆய்வு செய்ய டி.ஆர்.ஓ.,வுக்கு உத்தரவிட்டார்.மேலும் தற்காலிகமாக புறவழிச்சாலையை ஏற்படுத்திட மாற்றுவழி குறித்து அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலோசனை நடத்தி அதற்கான வழிமுறைகள் குறித்து அறிக்கை அனுப்பிட தாசில்தார் அனந்தராமுக்கு உத்தரவிட்டார். ஆய்வு மற்றும் ஆலோசனையின் போது டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், டி.எஸ்.பி., ஆரோக்கியம், பி.டி.ஒ., துரை, தாசில்தார் அனந்தராம், நகராட்சி கமிஷனர் அருணாச்சலம், நகராட்சி துணை சேர்மன் கோதண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us