ADDED : ஆக 28, 2011 01:14 AM
சேலம்: சேலம் மெட்ரோ ஆக்மீ லேடீஸ் சர்க்கிள் எண்.91 விருது வழங்கும் விழா, சேலத்தில் நடந்தது.
உலக நாடுகள் முழுவதும் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் 'பெண்கள் சம உரிமை நாள்' விழா கொண்டாடப்படுகிறது. சேலம் சாரதா மகளிர் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி, கல்வித்துறையில் சிறந்து விளங்கிய டாக்டர் லட்சுமி, பெண்களுக்காக சோதனை குழாய் மூலம் குழந்தையை பெற்று எடுத்து கொடுத்து, பல மருத்துவ சாதனைகளை செய்த டாக்டர் மகாலட்சுமி ஆகியோருக்கு, மெட்ரோ ஆக்மீ லேடீஸ் சர்க்கிள் சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. கிளப் சேர்மன் வாணிஸ்ரீநாத் தலைமை வகித்தார். செயலாளர் சுவேதா, உறுப்பினர்கள் மகிமா, ஹிட்டேல், சிடேல், வர்ஷா, பூஜா, சசிரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


