Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விநாயகர் சதுர்த்தி கூட்டம்

விநாயகர் சதுர்த்தி கூட்டம்

விநாயகர் சதுர்த்தி கூட்டம்

விநாயகர் சதுர்த்தி கூட்டம்

ADDED : ஆக 25, 2011 11:51 PM


Google News
உடுமலை : உடுமலை தாலுகா அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ஜெயமணி தலைமையில், விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது.

டி.எஸ்.பி., செந்தில், உடுமலை தாசில்தார் நல்லசாமி, மடத்துக்குளம் தாசில்தார் சின்னச்சாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், உடுமலை பகுதியில் இந்து முன்னணி சார்பில், 117 சிலைகள், இந்து மக்கள் கட்சி (தமிழகம்) 23, அனுமன் சேனா 24 என மொத்தம் 164 சிலைகள் 64 இடங்களில் வைக்கப்படுகின்றன. சிலைகள் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும்; குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும். 5அடி சிலைகளுக்கு மேல் வைக்க வேண்டாம். மது குடித்து விட்டு யாரும் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது.இதில், இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் வீரப்பன், நகரச் செயலாளர் ராமு, இந்துமக்கள் கட்சி (தமிழகம்) மாநில செய்தி தொடர்பாளர் ரமணன் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள முஸ்லீம் அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us