/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்வதில் தகராறு: 11 பேர் மீது வழக்குவேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்வதில் தகராறு: 11 பேர் மீது வழக்கு
வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்வதில் தகராறு: 11 பேர் மீது வழக்கு
வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்வதில் தகராறு: 11 பேர் மீது வழக்கு
வேலைக்கு ஆட்களை அழைத்துச் செல்வதில் தகராறு: 11 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 23, 2011 11:40 PM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே வேலைக்கு ஆட்களை அழைத்துச் சென்றது
தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு காலனியைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவர்
இப்பகுதியில் உள்ளவர்களை வேலைக்காக புதுச்சேரிக்கு அழைத்துச் செல்வது
வழக்கம். ஆனால் இவரால் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் வேலை பிடிக்கவில்லை
என்று வானமாதேவிக்கு திரும்பி வந்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த
தங்கதுரை அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் சொல்லித்தான் வேலைக்கு
சென்றவர்கள் திரும்பி வந்து விட்டதாக நினைத்து தமது ஆதரவாளர்களான
பொன்னப்பன், சத்யராஜ், ராமன், சீசப்பிள்ளை, ஆனந்தன் ஆகியோருடன் சேர்ந்து
ராமன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த திருமுருகன், வினோத்குமார் ஆகியோரை
தாக்கினர். இதனால் இரு கோஷ்டிகளுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து
நடுவீரப்பட்டு போலீசார் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் 11 பேர் மீது
வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.