Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இன்னர்வீல் சங்கத்தினர் நலத்திட்ட உதவி வழங்கல்

இன்னர்வீல் சங்கத்தினர் நலத்திட்ட உதவி வழங்கல்

இன்னர்வீல் சங்கத்தினர் நலத்திட்ட உதவி வழங்கல்

இன்னர்வீல் சங்கத்தினர் நலத்திட்ட உதவி வழங்கல்

ADDED : ஆக 22, 2011 12:17 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் இன்னர்வீல் சங்க மாவட்ட தலைவர் வருகை விழா நடந்தது.

சங்க தலைவி உண்ணாமலை முத்துவேல் தலைமை தாங்கினார். செயலாளர் நிஷா ராஜா, பொருளாளர் காயத்திரி ரமேஷ், வித்யா வெங்கடேஷ் சங்க நலத்திட்டங்கள், வரவு செலவு பேசினர். இன்னர்வீல் சங்க மாவட்ட தலைவர் திலகம் கிருஷ்ணா சங்க செயல்பாடுகள், சங்கத்தை எப்படி நடத்துவது குறித்து பேசினார். விருகாவூர் அரசு நடுநிலைப் பள்ளி ஏழை எளிய மாணவர்களுக்கு 105 ஜோடி காலணிகள் மற்றும் 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. எய்ட்ஸ் நோயால் பாதித்த 10 பேருக்கு அரிசி, மளிகை, சத்துணவுகள், போர்வை வழங்கப்பட்டது. சுழற்சி திட்டத்தின் மூலம் 3 குடும்பத்திற்கு ஆட்டுக் குட்டி, பள்ளி மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. சங்க முன்னாள் தலைவர்கள் சரஸ்வதி, சுமதி, கவுரி, உமாமகேஸ்வரி, அமுதா, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us