Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/தம்மம்பட்டி பகுதியில் பலத்த மழை: சுவேத நதியில் வெள்ளம்

தம்மம்பட்டி பகுதியில் பலத்த மழை: சுவேத நதியில் வெள்ளம்

தம்மம்பட்டி பகுதியில் பலத்த மழை: சுவேத நதியில் வெள்ளம்

தம்மம்பட்டி பகுதியில் பலத்த மழை: சுவேத நதியில் வெள்ளம்

ADDED : ஆக 19, 2011 02:22 AM


Google News
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த பலத்த மழையால், சுவேத நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

மேலும், ஆத்தூர் பகுதியில் அதிகபட்சமாக, 107.2 மி.மீ., மழையும், தம்மம்பட்டியில், 42.2 மி.மீ., மழையும் பதிவானது. கடந்த மூன்று நாட்களாக, தம்மம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, தம்மம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதியில், இரவு 11 மணியளவில் பெய்யத் துவங்கிய மழை, அதிகாலை 4 மணி வரை பெய்தது. அதன்படி, 42.2 மி.மீ., மழையளவு பதிவானது. தொடர்ந்து, கொல்லிமலையில் உற்பத்தியாகி தம்மம்பட்டி வழியாக பாய்ந்து செல்லும் வரட்டாறு, சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆத்தூர் பகுதியில், நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக, சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், நீரோடைகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன்படி ஆத்தூர் பகுதியில் அதிகபட்சமாக, 107.2 மி.மீ., மழை அளவு பதிவாகியது. கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us