ADDED : ஆக 15, 2011 01:52 AM
மதுரை : மதுரை ரிங் ரோட்டில், மணல் வாங்க சென்ற கொத்தனார், தனியார் பஸ் மோதி தலை துண்டிக்கப்பட்டு,
பலியானார்.திருமங்கலம் கற்பக நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன், 45.
கொத்தனார். இவர், மணல் வாங்க நேற்று காலை 7.30 மணிக்கு பஸ்சில் மதுரை ரிங் ரோடு - சிவகங்கை ரோடு சந்திப்பிற்கு சென்றார். லாரியின் பின்புறம் ஏறி, மணல் தரம் குறித்து ஆய்வு செய்துவிட்டு இறங்கினார். அப்போது விழுப்புரத்தில் இருந்து ஆதிபரா சக்தி ஊர்வலத்திற்காக மதுரை வந்த தனியார் பஸ் மோதியதில், சுந்தரராஜனின் தலை துண்டாகி சில அடி தூரம் வீசப்பட்டு, பலியானார். பஸ் டிரைவர் வித்யாபதியை கருப்பாயூரணி இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் கைது செய்தார்.


