/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆம்னி பஸ்களால் போக்குவரத்து இடையூறுஆம்னி பஸ்களால் போக்குவரத்து இடையூறு
ஆம்னி பஸ்களால் போக்குவரத்து இடையூறு
ஆம்னி பஸ்களால் போக்குவரத்து இடையூறு
ஆம்னி பஸ்களால் போக்குவரத்து இடையூறு
ADDED : ஆக 11, 2011 11:22 PM
கோவை : கோவை - சத்தி மெயின் ரோட்டில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் உள்ளது.
கோவையில் தினமும் சென்னை, பெங்களூரு, கன்னியாகுமரி, மதுரை, நெல்லை, காரைக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்களுக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பஸ்களுக்கு என தனியாக ஒரு பஸ் ஸ்டாண்ட் செயல்படும் போதிலும், பல பஸ்கள் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படுவதில்லை. மாறாக, காந்திபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ் ஸ்டாண்ட் முன்பும், வி.கே.கே., மேனன் ரோடு, சக்தி ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு உள்ளிட்ட இடங்களிலும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் பிக்கப் செய்யப்படுகின்றனர். இதன்காரணமாக நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு கோவை மாநகர போலீசார் நிரந்தர தீர்வு காணவேண்டும் என, பொதுமக்கள் எதிபார்க்கின்றனர்.