/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கணக்காளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம்கணக்காளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம்
கணக்காளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம்
கணக்காளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம்
கணக்காளர் பணிக்கு பதிவு மூப்பு விபரம்
ADDED : ஆக 11, 2011 01:02 AM
சிவகங்கை : வட்டார வள மையங்களில் இயங்கும் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் கணக்காளர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படும் பதிவு மூப்பு விபரம்: கல்வித்தகுதி: பி.காம்., பட்டப்படிப்புடன் கம்யூட்டரில் டேலி கோர்ஸ் முடித்து இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.6.2011 அன்று 35 வயதிற்கு மேற்படாத பொது போட்டியாளரும், தாழ்த்தப்பட்டோர் , மிக பிற்பட்டோருக்கு வயது வரம்பு கிடையாது.
பரிந்துரை: தாழ்த்தப்பட்டோர் முன்னுரிமையற்றவர்கள் 10.2.2003, மிக பிற்பட்டோர் 17.5.2005, பொது போட்டியாளர் 4.2.2004 வரையிலும் பதிவு செய்தவர்களும், இதே கல்வித்தகுதியுடைய அனைத்து முன்னுரிமை (ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் புரிந்தோர், முன்னாள் மற்றும் இன்னாள் படைவீரரை சார்ந்தோர், உடல் ஊனமுற்ற போலீசார்) பரிந்துரை செய்யப்படவுள்ளனர். பதிவுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படுவதை நாளை (12 ம்தேதி) நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மனோகரன் தெரிவித்துள்ளார்.


