Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மழை காலத்தில் 100 பஸ்கள் இயக்குவதில் சிக்கல்

மழை காலத்தில் 100 பஸ்கள் இயக்குவதில் சிக்கல்

மழை காலத்தில் 100 பஸ்கள் இயக்குவதில் சிக்கல்

மழை காலத்தில் 100 பஸ்கள் இயக்குவதில் சிக்கல்

ADDED : ஆக 03, 2011 10:39 PM


Google News
திருப்பூர் : அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல அலுவலகம் முன்புள்ள சாக்கடை கால்வாயை சீரமைத்து, பாலம் அமைத்து தருவதாக மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்து, பல ஆண்டுகளாகி விட்டது.

இன்னமும் நிறைவேற்றாததால், மழை காலங்களில் சாக்கடை நீர் சூழ்ந்து, பஸ் போக்குவரத்து மற்றும் ஊழியர்கள் பாதிப்பதாக, கோவை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.கோவை அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம், மாநகராட்சி நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு: அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் கிளையில் 100 பஸ்கள் இயக்கப்படுகின்றன; 600 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். திருப்பூர் கிளையில் இருந்து திருப்பூர் நகர் மற்றும் தொலைதூர பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சராசரியாக 42 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இயக்கப்படும் பஸ்கள் மூலம் மற்ற பகுதிகளில் இருந்து திருப்பூருக்கும், திருப்பூரில் இருந்து மற்ற பகுதிக்கும் தினமும் 1.10 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். திருப்பூரின் வளர்ச்சிக்கும், மக்களின் பொருளாதார தேவைக்கும் அரசு போக்குவரத்து கழகம் பயன்படுவதோடு, மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தின் பிரதான வாயில் முன்புள்ள சாக்கடை கால்வாயை புதுப்பிக்கும் பணி துவங்கி, முழுமையாக முடிக்கப்படாமல் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், நகரிலுள்ள பெரும்பாலான சாக்கடை கால்வாய் கழிவுகள் தேங்குவதோடு, மழை காலங்களில் சாக்கடை கழிவுகளுடன் வெள்ள நீர் அரசு போக்குவரத்து கிளைக்குள் தேங்குகிறது. அங்குள்ள உணவகம், தொழிலாளர் ஓய்வறை முன் தேங்குகிறது. இதன் காரணமாக, உரிய நேரத்தில் பஸ்கள் இயக்க முடியாத நிலை ஏற்படுவதோடு, பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. திருப்பூர், மாவட்டமாக செயல்பட துவங்கியதைஅடுத்து, மாவட்ட அளவிலான மண்டல அலுவலகமும் தற்போது கிளை அலுவலக வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது. மண்டல அலுவலகம் திறப்பு விழாவின்போது, கிளையை பார்வையிட்ட போக்குவரத்து அமைச்சர் மற்றும் மேயர் மற்றும் கலெக்டரிடம் இதுகுறித்து கோரிக்கை விடுத்தபோது, மாநகராட்சி சார்பில் உடனடியாக சாக்கடை கால்வாய் சீரமைக்கப்பட்டு, பாலம் கட்டித்தரப்படும் என மேயர் செல்வராஜ் உறுதியளித்தார். ஆனால், இதுவரை சாக்கடை கால்வாய் சீரமைப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணி நடக்கவில்லை. அரசு போக்குவரத்து கிளையில் உள்ள 100 பஸ்களை உரிய நேரத்தில் இயக்கவும், தொழிலாளர்களின் சுகாõதார சீர்கேடு பிரச்னைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us