/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போக்குவரத்து விதிமுறைகள் மாணவர்களுக்கு பயிற்சிபோக்குவரத்து விதிமுறைகள் மாணவர்களுக்கு பயிற்சி
போக்குவரத்து விதிமுறைகள் மாணவர்களுக்கு பயிற்சி
போக்குவரத்து விதிமுறைகள் மாணவர்களுக்கு பயிற்சி
போக்குவரத்து விதிமுறைகள் மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 03, 2011 10:03 PM
கடலூர் : போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்து மாணவர்களுக்கு போலீசார் பயிற்சி அளித்தனர்.
சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை குறித்த இரு நாள் பயிற்சி முகாம் கடலூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. டி.எஸ்.பி., வனிதா தலைமை தாங்கி, பயிற்சி பெற வந்த மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், விஸ்வநாதன் ஆகியோர் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பயிற்சி அளித்தனர். முகாமில் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.