/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் - சிலம்பிநாதன்பேட்டைக்கு பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதிகடலூர் - சிலம்பிநாதன்பேட்டைக்கு பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதி
கடலூர் - சிலம்பிநாதன்பேட்டைக்கு பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதி
கடலூர் - சிலம்பிநாதன்பேட்டைக்கு பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதி
கடலூர் - சிலம்பிநாதன்பேட்டைக்கு பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதி
ADDED : ஆக 03, 2011 01:49 AM
நடுவீரப்பட்டு : கடலூர் - சிலம்பிநாதன்பேட்டைக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படும் ஒரே அரசு பஸ் சரியாக வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடலூரிலிருந்து நடுவீரப்பட்டு வழியாக சிலம்பிநாதன்பேட்டைக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பஸ் தடம் எண்.15 இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் தற்போது புதுப்பாளையம், கீழ்மாம்பட்டு வரை சென்று வருகிறது. இந்த பஸ்சை நம்பி தான் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை மற்றும் குமளங்குளம் ஊராட்சியை சேர்ந்த சஞ்சீவிராயன்கோவில், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடலூர் சென்று வருகின்றனர். இந்த பஸ்சுக்கு எதிர் பஸ் விடக் கோரி பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித பலனும் இல்லை. இந்த ஒரு பஸ்சும் கடந்த ஒரு வாரமாக சரியாக வருவதில்லை. இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகள் கடலூர் கடைகளில் பணிபுரியும் ஆண், பெண் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, அரசு பஸ் தடம் எண்.15ஐ தொடர்ந்து இயக்கவும், இந்த பஸ்சுக்கு எதிர்பஸ் விடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


