Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வியாபாரி பலி :உறவினரே கொலை செய்தாரா? விசாரணை தீவிரம்

விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வியாபாரி பலி :உறவினரே கொலை செய்தாரா? விசாரணை தீவிரம்

விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வியாபாரி பலி :உறவினரே கொலை செய்தாரா? விசாரணை தீவிரம்

விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வியாபாரி பலி :உறவினரே கொலை செய்தாரா? விசாரணை தீவிரம்

ADDED : ஆக 03, 2011 01:16 AM


Google News

சென்னை : விடுதியில் தங்கியிருந்த எலக்டிரிக்கல் மொத்த வியாபாரி, மர்மான முறையில், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.

அவரது உறவினரே திட்டமிட்டு கொலை செய்தாரா என போலீசார், அவரைப்பிடித்து விசாரிக்கின்றனர். 'நான் சுடவில்லை' எனத் திரும்பத் திரும்ப கூறுவதால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.

சென்னை, ஏழுகிணறு வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் சுதிஷ்சர்மா, 50; எலக்ட்ரிக்கல் பொருட்கள் மொத்த வியாபாரி. இவரது மனைவி மம்தாவின் அண்ணன் மகன் ஆசிஷ்சர்மா, வியாபாரத்திற்காக சுதிஷ்சர்மாவுக்கு, அவ்வப்போது பணம் கொடுத்து உதவி வந்தார்.



ஆசிஷ்சர்மா உத்தரபிரதேசம், மதுராவைச் சேர்ந்தவர். சென்னை வரும்போது, யானைக்கவுனி பெருமாள் கோவில் தெருவில் உள்ள, ஜெயின் அமைப்பிற்கு சொந்தமான விடுதியில் தங்குவது வழக்கம். ஆசிஷ்சர்மா நேற்று முன்தினம் சென்னை வந்தார். வழக்கம்போல் யானைக்கவுனி ஜெயின் விடுதியில் தங்கியிருந்தார். இவரைச் சந்திக்க, சுதிஷ்சர்மா விடுதிக்குச் சென்றார். நள்ளிரவு 12 மணியளவில், சுதிஷ்சர்மாவும், ஆசிஷ் சர்மாவும் அறையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. உஷாரான காவலாளி, கேட்டை இழுத்து மூடிவிட்டு, போலீசுக்கு தகவல் கொடுத்தார். பின், ஆசிஷ்சர்மா தங்கியிருந்த அறையில் சென்று பார்த்தபோது, சுதிஷ்சர்மா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். யானைக்கவுனி போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணையை துரிதப்படுத்தினர். விபரீதம் நடந்ததும் தப்பி ஓட முயன்ற ஆசிஷ் சர்மாவையும் மடக்கிப்பிடித்தனர்.



சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சுதிஷ்சர்மாவின் வியாபாரத்திற்கு ஆசிஷ்சர்மா பணம் கொடுத்து உதவியுள்ளார். ஓரிரு மாதத்தில் ஆசிஷ்சர்மாவின் மகளுக்கு திருமணம் நடக்க உள்ளது. இதற்காக, கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறு ஆசிஷ்சர்மா கேட்டுள்ளார். அப்போது, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆசிஷ்சர்மா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால், சுதிஷ்சர்மாவைச் சுட்டுக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பூக்கடை துணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் குமாரும் தொடர் விசாரணை நடத்துகின்றனர்.



விசாரணையின்போது, 'நான்தான் சுட்டேன்' என ஆரம்பத்தில் கூறிய ஆசிஷ்சர்மா, பின்'நான் சுடவில்லை, அவர்தான் என் துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொண்டார்' என, முன்னுக்குப்பின் முரணானத் தகவல்களைக் கூறி வருவதால், போலீசார் குழப்பமடைந்துள்ளனர். விசாரணையின்போது,'நாங்கள் இருவரும் இரவு வழக்கம்போல் பேசிக் கொண்டிருந்தோம். வியாபாரத்திற்கு நிறைய பணத்துடன் வருகிறாயே, பாதுகாப்புக்கு என்ன செய்கிறாய் என கேட்டார். நான் உரிய அனுமதியுடன் வைத்துள்ள துப்பாக்கியைக் காட்டினேன். அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்' என்று கூறினார். மேலும்,'நான் பாத்ரூம் சென்று வருவதற்குள், துப்பாக்கிச் சத்தம் கேட்டது. பதறியடித்து உள்ளே வந்தபோது, சுதிஷ்சர்மா இறந்து கிடந்தார். துப்பாக்கியை எப்படி கையாளுவது எனத் தெரியாமல், அழுத்திப் பார்த்தபோது, இந்த விபரீதம் நடந்திருக்கும் என நினைக்கிறேன். நான் சுடவில்லை' என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார். ஆசிஷ்சர்மா திரும்பத் திரும்ப இப்படி கூறி வருவது உண்மையாக இருக்குமா, திட்டமிட்டு ஆசிஷ்சர்மா கொலை செய்து விட்டு, நாடகமாடுகிறாரா என, போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us