உடுமலை : உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்த குறை தீர் முகாமில், 318 மனுக்கள் பெறப்பட்டன.
உடுமலை தாலுகா அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ஜெயமணி தலைமையில், குறைதீர் முகாம் நடந்தது. வீட்டுமனைப்பட்டா கோரி 283 ; முதியோர் உதவித்தொகை கோரி 13, குடும்ப அட்டைக்காக 6, பட்டாமாற்றம் கோரி 4, மற்றவைக்காக 12 என 318 மனுக்கள் பெறப்பட்டன. சாலைவிபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி மூன்று பேரூக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது.